எம். செரீனா ஜோசபின்
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் இந்தியாவில் போர் போன்ற சூழல் உருவாகி உள்ளது. இதை எதிர்கொள்ள போர்க்கால கட்டுப்பாட்டு அறை அவசியம் என்று மூத்த மருத்துவர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) வைராலஜி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப் பதாவது:
கோவிட்-19 வைரஸ் காய்ச்ச லால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அடுத்த 2 வாரங்களில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவக்கூடும் என்று அஞ்சுகிறேன். இந்த காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான மருத்துவமனை களில் தனி வார்டுகள் இல்லை. சுவாசக் கோளாறுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கருவிகள் இல்லை. பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்கள் இல்லை.
கோவிட்-19 வைரஸ் காய்ச்ச லால் இந்தியாவில் போர் போன்ற சூழல் உருவாகி உள்ளது. இதை எதிர்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் போர்க்கால கட்டுப்பாட்டு அறை அவசியமாகிறது. இதில் திறன்வாய்ந்த நிபுணர்கள் பணிய மர்த்தப்பட வேண்டும். அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து புதிய வியூகங்களை வகுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக நாம் இப்போது நேரடி போரில் ஈடுபட்டிருக்கிறோம்.
ஆனால் போர் கட்டுப்பாட்டு அறை எங்கே இருக்கிறது? தேசிய நோய்கள் தடுப்பு மையம் (என்சிடிசி) அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அல்லது நிர்மாண் பவனில் போர் கட்டுப்பாட்டு அறை செயல்படு கிறதா? இந்த விவகாரத்தில் இதுவரை முடிவு எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
வித்தியாசமான வைரஸ்
சார்ஸ், எச்1என்1, எச்ஐவி சவால்களை நாம் எதிர்கொண்டி ருக்கிறோம். பல்வேறு படிப்பினை களை கற்றிருக்கிறோம். ஆனால் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் முற்றிலும் வித்தியாசமானது. அதனால் இயல்பாகவே அச்சம் எழுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுகாதாரத் துறை வலுவாக உள்ளது. சுமார் 80 சதவீத மாவட்டங் களில் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இருந்தா லும் சில விஷயங்கள் கவலையளிக் கின்றன. கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ள சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் தெளிவான அறிவுரைகள் வழங்கப் பட்டிருக்கிறதா என்பது தெரிய வில்லை.
நிமோனியா காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். பாக்டீரியா கிருமிகளால் ஏற்பட்ட நிமோனியாவா, மைகோ பிளாஸ்மா நிமோனியாவா, வைரஸ் நிமோனியாவா என்பதை தெளிவாக கண்டறிய வேண்டும்.
இப்போது தொலைபேசி, மொபைல்போன் அழைப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் படுகிறது. கைகளைக் கழுவ வேண்டும். வாய், மூக்கு, கண் களைக் தொடக்கூடாது என்று அறிவுரை கூறப்படுகிறது. ஆனால் இது போதாது. பொதுமக்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும். மும்பை, டெல்லிக்கு பயணம் செய்யலாமா, வேண் டாமா? எந்தெந்த மாநிலங்களில் பயணக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. இவை உட்பட தேவை யான முழு விவரங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும். நாள்தோறும் மக்களுடன் தகவல் களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு அதிகாரப்பூர்வமான ஊடகம் அவசியம்.
அமெரிக்காவுக்கு நிகராக...
அமெரிக்காவில் சுகாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அந்த நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டுத் துறை (சிடிசி) மக்களுக்கு முறையாக வழங்குகிறது. அமெரிக்காவின் சிடிசி-க்கு இணையாக நமது நாட்டில் என்சிடிசி செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் மக்களுக்கு முழுமையான விவரங்களை வழங்க வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல் படும் போர்க்கால கட்டுப் பாட்டு அறை அவசியம். இது போன்ற கட்டமைப்புகள் இல்லை யென்றால் நாட்டின் நிலைமை மோசமாகும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago