ஓட்டலில் இரவு உணவுக்கு வெங்காயம் தராத உரிமையாளர் சுட்டுக் கொலை

By ஆர்.ஷபிமுன்னா

பாட்னா ஓட்டலில் இரவு உணவு அருந்தியவர்கள் அதற்கு தொட்டுக் கொள்ள வேண்டி கேட்ட வெங்காயத்தை தரமறுத்த அதன் உரிமையாளரை சுட்டுக் கொன்றனர்.

பிஹாரின் பேகுசராய் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கூறி பொதுமக்கள் கலவரம் செய்தனர். இதன்மூலம், காய்கறிகளை விட மனித உயிர்களின் விலை மலிவாகும் நிலை உருவாகி விட்டதாகத் தெரிய வந்துள்ளது.

பேகுசராய் மாவட்டத்தின் பரோனி ரயில் நிலையம் முன்பாக இருக்கும் லலித் நாரயண் மார்கெட்டில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வருபவர் ரித்திஷ்குமார் பண்டிட் (29). இவரது ஓட்டலுக்கு நேற்று இரவு குணால் குமார், விஜய் குமார், சோட்டே லால் மற்றும் தனராஜ் ஆகிய நான்கு இளைஞர்கள் உணவருந்த வந்திருந்தனர்.

இவர்களுக்கு அங்கு பறிமாறப்பட்ட உணவுடன் வெறும் எலுமிச்சை மற்றும் மிளகாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. வட இந்தியாவில் வழக்கமாக உணவுடன் சேர்த்து அளிக்கப்படும் வெங்காயம் தரப்படவில்லை. இதனால், வெங்காயம் தரப்படாதது குறித்து உரிமையாளர். ரித்தீஷிடம் சென்று நால்வரும் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதற்கு, வெங்காயம் விற்கும் விலையில் அதை உணவுடன் தொட்டுக் கொள்ள தரமுடியாது என மறுத்துள்ளார் ரித்திஷ். இதை ஏற்காத நால்வரில் ஒருவர் தன்னிடம் இருந்த கள்ள கைத்துப்பாக்கியால் ரித்திஷை சுட்டிருக்கிறார். மற்ற மூவரும் ரித்தீஷ் தப்பி விடாதபடி மறித்து பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நெற்றிப் பொட்டில் குண்டு பட்டு ரித்திஷின் உயிர் அதே இடத்தில் பிரிய, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் உள்ள பரோனி ரயில்நிலையக் காவல்துறையினர் நான்கு பேர் மீதும் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து குற்றவாளிகள் நால்வரையும் உடனடியாக கைது செய்யக் கோரி அங்கிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்து மறியல் செய்துள்ளனர். அங்குள்ள முக்கிய சாலையில் போக்குவரத்தை மறிக்கும் வகையில் டயர்களை எறித்து வீசியுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தொலைபேசியில் பேசிய அப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர் ஜனார்தன் பிரசாத் சிங் கூறுகையில், ‘வெங்காய பிரச்சனையை ஆதாரமாக வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் மீதும் ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நடைபெற்று வருகிறது. இந்த சமபவத்தில் நால்வர் மீது திருட்டு, கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி நடந்து வருகிறது.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், வெங்காய விவகாரத்தில் துப்பாக்கியால் சுடப்படுவது முதன் முறை அல்ல, தற்போதுள்ள நிலையை போல் கடைசியாக வெங்காயத்தின் விலை இரு வருடங்களுக்கு முன் அதிகமாகி விற்கப்பட்டதும் உபியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. இங்குள்ள ஏட்டாவின் சிறிய ஓட்டலில் பிரட் மற்றும் ஆம்லெட் உண்ண வந்த கிரிமினல்கள், முட்டையில் வெங்காயம் போடாததால் கோபம் கொண்டு அதன் உரிமையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டனர்.

இதே மாநிலம் அலிகரில் பேல்புரியில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸ் போட்டு கொடுத்தமைக்காக அதன் உரிமையாளர் வாடிக்கையாளர்களால் தாக்கப்பட்டு வழக்குகள் பதிவாகி இருந்தது. உபியின் இந்த இரு சம்பவங்களிலும் அந்த ஓட்டல்களின் உரிமையாளர்கள் உயிர் தப்பி விட, பிஹாரை சேர்ந்தவரது உயிர் மட்டும் பரிதாபமாக பிரிந்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்