கேரளாவில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி: இந்தியாவில் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

கேரளாவில் இன்று மேலும் ஒரு குழந்தைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோவிட்-19 வைரஸ்காய்ச்சல் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதே காய்ச்சல் காரணமாக உத்தர பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின் லடாக்கில் 2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சீனாவில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவி உட்பட 3 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 3 பேரும் வீடு திரும்பினர்.

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் கேரளாவில் இன்று மேலும் ஒரு குழந்தைக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இத்தாலியில் இருந்து கொச்சி திரும்பிய தம்பதியின் 3 வயது குழந்தைக்கு இருமல், காய்ச்சல் இருந்ததையடுத்து அவர்கள் முன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த குழந்தைக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்