நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
வரும் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் என்பதால் அதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மாநிலங்களவையில் நேற்று பேசியதாவது:
பெண்கள் இன்று பல துறைகளில் வாகைசூடிக் கொண்டிருக்கிறார்கள். அன்பான தாயாக திகழ்வதில் இருந்து ஜெட் விமானத்தை ஓட்டும் விமானி வரையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்பை வகிப்பது முதல் மலைச் சிகரத்தில் கால் பதிப்பது வரை பல தடைகளையும் மீறிபெண்கள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதைத் தடுக்க காவல் துறையும் நீதித்துறையும் தீவிரமாக செயல்பட்டால் மட்டும் போதாது. பெண்கள் குறித்த தவறான பார்வை மாற வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்குக் கூடுதல் இடம்கிடைக்க வேண்டும். நாட்டைஆளும் அதிகாரம் பெண்களுக்குக் கிடைக்க வழி செய்யப்படவேண்டும். அவர்களுக்கு மாநிலசட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் கூடுதல் இடம்கிடைக்க வகை செய்ய வேண்டும். நாட்டில் வகுக்கப்படும் அனைத்துதிட்டங்களுக்கான நிர்ணய குழு விலும் பெண்களுக்கு இடம்அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago