ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மேன் நரேஷ் கோயல் மற்றும் சிலர் மீது அமலாகத் துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான நிதிமுறைகேட்டு கிரிமினல் வழக்கைத் தொடர்ந்ததோடு, இவரது வீடு, அலுவலகத்திலும் கடும் சோதனைகளை நடத்தியது.
சமீபத்தில் மும்பை போலீஸ் இவர் மீது முதல் தகவலறிக்கைப் பதிவு செய்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள நரேஷ் கோயல் வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டதோடு அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. மும்பையில் உள்ள ட்ராவல் நிறுவனம் தொடர்பான நிதிமுறைகேடு வழக்காகும் இது.
நரேஷ் கோயலுக்கு மொத்தம் 19 நிறுவனங்கள் இருப்பதாகவும் இதில் 5 வெளிநாடுகளில் இருப்பதாகவும் ஏற்கெனவே அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இவரது நிறுவனங்களில் சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகள் இருப்பதாக அமலாக்கப்பிரிவு கண்காணித்து வந்தது.மேலும் இந்த நிறுவனம் மிகப்பெரிய நஷ்டக் கணக்கை காட்டியவுடன் சந்தேகம் வலுத்தது.
விமான குத்தகை நடைமுறைகளில் சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனை மூலமாக தவறான வழியில் சம்பாதித்த நிதி வேறு ரூட்டில் அயல்நாட்டு போலி நிறுவனங்களுக்கு மாற்றியதாக இவர் மீது புகார்கள் எழுந்தன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ‘பணம்’ இல்லாத காரணத்தினால் மூடப்பட்டது. இதற்கு ஒரு மாதம் முன்னதாக நரேஷ் கோயல் நிறுவன சேர்மேன் பதவியிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago