பேடிஎம் ஊழியருக்கு கரோனா தொற்று; இந்தியாவில் பாதிப்பு 29 ஆக அதிகரிப்பு: வெளிநாட்டிலிருந்து வருவோர் அனைவரையும் சோதனை

By செய்திப்பிரிவு

பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது, இதனையடுத்து வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் சோதிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15 இத்தாலியப் பயணிகள் 8 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் இருவருக்கு அதி அடர்த்தி கரோனா இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து சர்வதேச விமான நிலையங்கள் அனைத்திலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கரோனா சோதனை நடத்தப்படவுள்ளது. முன்பு பட்டியலிடப்பட்ட 12 நாடுகளிலிருந்து வருவோர் மட்டுமல்லாது எந்த வெளிநாட்டிலிருந்து வந்தாலும் அவர்களுக்கும் விமான நிலையத்தில் சோதனை நடைபெறும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

மேலும் ஒரு பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அந்தப் பகுதியில் 3 கிமீ பரப்புக்கு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரால் அவரது குடும்பத்தினர் 6 பேருக்கும் பரவி இவர்கள் அனைவரும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்