‘சில மனிதர்களும், சில சேனல்களும்’ கரோனா வைரஸ் குறித்த பதற்றத்தை ஊதிப்பெருக்கி டெல்லி கலவர சேதங்களிலிருந்து கவனத்தைத் திசைத் திருப்புகின்றனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
டெல்லியின் ‘மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்’ கொண்ட மக்கள் வன்முறையினால் கொல்லப்படுகிறார்களே தவிர வைரஸினால் அல்ல.
தெற்கு தினாஜ்பூரில் திரிணமூல் கூட்டத்தில் பேசிய மம்தா கூறியதாவது, “சிலர் இன்று கரோனா... கரோனா என்று கூச்சலிடுகின்றனர். ஆம், அது ஒரு அச்சுறுத்தும் நோய்தான், ஆனால் பதற்றத்தை உருவாக்காதீர்கள், சில டிவி சேனல்கள் இன்று டெல்லி வன்முறைகளை பின்னுக்குத் தள்ளி கரோனா குறித்து ஊதிப்பெருக்குகின்றனர்.
டெல்லி வன்முறையில் இறந்தவர்கள் கரோனாவினாலோ, வேறு நோயினாலோ இறந்தவர்களல்ல. இவர்கள் வைரஸிற்கு பலியாகியிருந்தால் நமக்கு குறைந்தப் பட்சம் இவர்கள் இந்த அச்சுறுத்தும் நோயினால் இறந்தவர்கள் என்று தெரிந்து விடும். ஆனால் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிரம்பிய மக்கள் இரக்கமின்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
» டெல்லி வன்முறை ‘ஒருதலைப்பட்சமானது, திட்டமிட்டது’- டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் அறிக்கை வெளியீடு
» கரோனா வைரஸ் தொற்றிய நோயாளியின் குடும்பத்தினர் 6 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு
அவர்களது அராஜத்தைக் கவனியுங்கள், கோலி மாரோ என்கின்றனர், இது பெங்கால், டெல்லி அல்ல என்பதை நான் அவர்களுக்கு எச்சரிக்கிறேன்.
டெல்லியில் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. நிறைய உடல்கள். நிறைய பேர் வீடற்றவராகியுள்ளனர். சாக்கடைகளிலிருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன. சுமார் 700 பேரை இன்னும் காணவில்லை.” என்று பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago