கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என பாஜக மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார்.
னாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை நேற்று மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு இன்று உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
» கரோனா வைரஸ்: ஹோலி கொண்டாட்டம் இல்லை; பிரதமர் மோடி முடிவு
» இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக மூத்த தலைவர்களும் கோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என பாஜக மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago