சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5 வெளிநாட்டினர் வெளியேற உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “குடியேற்றத்துறை (பிஓஐ) அளித்துள்ள தகவலின்படி, சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் விசா விதிமுறைகளை மீறியதற்காக 5 வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நிறைவேறியது. இந்த சட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இந்த சட்டம் முஸ்லிம்கள் உள்ளிட்ட இந்திய மக்களின் குடியுரிமையை பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் அதற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. அதேவேளையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் பரவலாக பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்