டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதில் கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த 23-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது அடுத்தடுத்த நாட்களில் பெரும் கலவரமாக வெடித்து. இந்த கலவரத்தில் தலைமை காவலர், உளவு துறை அதிகாரி உட்பட 42 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 நாட்களுக்குப் பிறகு அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், கோகல்புரி மற்றும் ஷிவ் விஹர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து நேற்று முன்தினம் மேலும் 4 உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதன்மூலம் உயிரிழப்பு 46 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கலவரத்தின்போது கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மாவின் (26) குடும்பத்தினருக்கு கருணைத் தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.
உளவுத் துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றிய அங்கித் ஷர்மா கடந்த 25-ம்தேதி காணாமல் போனார். பணியிலிருந்து வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தினர் கூறியிருந்தனர். இதனிடையே, அடுத்த நாள் அவரது உடல் கழிவுநீர் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டது. அவரது உடலில் 400 வெட்டு காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் தாஹிர் உசேன் ஆதரவாளர்களால் அங்கித் ஷர்மா கொல்லப்பட்டார் என அவரது தந்தையும் முன்னாள் உளவுத் துறை அதிகாரியுமான ரவீந்திர ஷர்மா குற்றம்சாட்டினார். இதையடுத்து, தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்எப் வீரருக்கு ரூ.10 லட்சம்
எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எப்) வீரராக ஒடிசாவில் பணிபுரிந்து வருபவர் முகமதுஅனீஸ். இவருடைய வீடு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் நடந்த கலவரத்தின்போது, அனீஸின் வீடும் தீப்பற்றி எரிந்ததில்பலத்த சேதமடைந்தது. எனினும்,அவருடைய குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து அறிந்த பிஎஸ்எப் டிஐஜி புஷ்பேந்திர சிங் ரத்தோர் கடந்த 29-ம் தேதி அனீஸின் வீட்டை பார்வையிட்டார். அப்போது, அந்த வீட்டை மறுசீரமைக்க தேவையான உதவி செய்யப்படும் என ரத்தோர் கூறியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமையகத்தில் பிஎஸ்எப்ஐஜி டி.கே.உபாத்யாய், அனீஸிடம்ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நேற்று வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago