சமூக ஊடகங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அவரை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
உலக அளவில் அதிகமான அளவு சமூக ஊடகங்களில் ஆதரவாளர்களைக் கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 53.3 மில்லியன் மக்களும், ஃபேஸ்புக்கில் 44 மில்லயனும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியனும், யூடியூப்பில் 4.5 மில்லியனும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தான் பதவி ஏற்ற நாளில் இருந்து சமூக ஊடகங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, வாழ்த்துகளைத் தெரிவிப்பது, தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்றாலும், மக்களிடமும், ஆதரவாளர்களிடமும் சமூக ஊடகங்கள் வாயிலாக நெருக்கமாக மோடி இருந்து வருகிறார்.
ஆனால், சில நேரங்களில் நாட்டில் நடக்கும் முக்கியச் சம்பவங்கள், நிகழ்வுகள், குறிப்பாக டெல்லி கலவரம், கும்பல் தாக்குதல் போன்றவற்றில் கருத்துகள் ஏதும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்த ஞாயிறன்று, அனைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago