இந்த முறையும் தூக்கு தண்டனை இல்லை? நிர்பயா குற்றவாளிகள் இருவர் மனுவுக்கு பதில் அளிக்க திஹார் சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By பிடிஐ

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திஹார் சிறை நிர்வாகம் மார்ச் 2-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில் குற்றவாளிகள் அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகிய இருவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

திஹார் சிறை நிர்வாகம் சார்பிலும், நிர்பயா பெற்றோர் சார்பிலும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூக்கு தண்டனை குற்றவாளிகளில் பவன் குப்தா தவிர மற்ற மூவர்களான அக்சய் குமார் சிங், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.

பவன் குமாருக்கு மட்டுமே குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்பும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

சீராய்வு மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்தபின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பவன் குப்தா தரப்பில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்த குற்றவாளி அக்சய் சிங் தனது தண்டனையைக் குறைக்க கோரி குடியரசுத் தலைவரிடம் மீண்டும் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்

சீராய்வு மனு மற்றும் கருணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி குற்றவாளிகள் இருவர் சார்பிலும் அவர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் டெல்லி நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.

அதில் " குற்றவாளிகள் அக்சய் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத்தாக்கல் செய்திருப்பதாலும், பவன்குமார் குப்தா சீராய்வு மனுத்தாக்கல் செய்திருப்பதாலும் தூக்கு தண்டனையை வரும் மார்ச் 3-ம்தேதி நிறைவேற்றுவதை நிறுத்த வேண்டும். அக்சய் சிங்கின் கருனை மனுவை குடியரசுத் தலைவர் முதலில் கவனத்துடன் அணுகவில்லை அதனால் 2-வது முறையாகத் தாக்கல் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா, மார்ச் 2-ம் தேதிக்குள் திஹார் சிறை நிர்வாகம் பதி்ல் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.மீண்டும் வழக்கு மார்ச் 2-ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவித்தார்

சீராய்வு மனுத் தாக்கல் செய்தால், அந்த மனு விசாரிக்கப்பட்டு அதன் முடிவு வந்தபின், அடுத்த ஒருவாரத்துக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற சட்டவிதி இருக்கிறது. மேலும், கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அடுத்த 15 நாட்களுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்ற சட்டவிதி இருப்பதால், மார்ச் 3-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது சந்தேகமே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்