மத்திய பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்; 2 குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.

By ஏஎன்ஐ

ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்த அரிதான நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துவிட்டன.

மாநிலத்தின் ஷியோபூரில் மாவட்ட மருத்துவமனையில் இன்று காலை நடைபெற்ற பிரசவத்தில் 6 பெண் குழந்தைகள் பிறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவத் துறையில் இப்படி ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பதை செக்ஸ்டூப்லெட்ஸ் என்று அழைக்கின்றனர்.

ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்ற இப்பிரசவத்தின்போது பிறந்த இரண்டு குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை.

மற்ற 4 கைக்குழந்தைகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக Sick Newborns Care Unit எனப்படும் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்புக்காக உளள ஒரு தனிப்பிரிவில் நம்பிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர்.

தாயின் நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்