கரோனா வைரஸ் பீதியை போக்கும் வகையில் பொது மக்கள் முன்னிலையில் தெலங்கானா அமைச்சர்கள் சிக்கன் சாப்பிட்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் சிக்கன் வழங்கப்பட்டது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்துள்ளது.மேலும், கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 31 மாகாணங்களில் இதுவரை 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 7,000-க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 39 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
» கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்: உ.பி.யை பின்பற்றும் டெல்லி போலீஸார்
» இந்தியாவின் கண்டுபிடிப்புகளால் உலகம் பயன் அடைகிறது: அறிவியல் தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
கரோனா வைரஸ் உயிரினங்கள் மூலம் பரவுவதாகவும், உயிரினங்களின் இறைச்சியை சாப்பிடுவதால் கரோன வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என பல நாடுகளிலும் வதந்தி பரவி வருகிறது. இதனால் சிக்கன் சாப்பிட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் மக்கள் அச்சத்தை போக்கும் வகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் முன்னிலையில் அம்மாநில அமைச்சர்கள் சிக்கன் சாப்பிட்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் சிக்கன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிக்கன் சாப்பிடுவதால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது வெறும் வதந்தியே, அதில் துளியும் உண்மை இல்லை என பேசினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago