முஸ்லிம்களுக்கு கல்வியில் 5% இடஒதுக்கீடு:  மகாராஷ்டிர அரசு உறுதி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் அரசு கல்விநிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அரசு கல்விநிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அதனை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தநிலையில் இதுபற்றி மாநில அமைச்சர் நவாப் மாலிக் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு அரசு கல்விநிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க மாநில உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு இடஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீடு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்