குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் சொந்தமான 84 வயதான ஆண் யானை பத்மநாபன் நேற்று உயிரிழந்தது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் உள்ளது. திருச்சூர் பூரம் திருவிழா, மாதந்தோறும் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், விசேஷங்களில் இந்த யானைதான் குருவாயூரப்பனின் சிலையை சுமந்து செல்லும். இந்த யானைக்கு கஜரத்னம் என்றும் பெயருண்டு
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த யானை நோய்வாய்ப்பட்டிருந்தது. உடலில் வீக்கம் இருந்ததால் மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு யானை உயிரிழந்தது என்று குருவாயூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.பி.மோகன்தாஸ் தெரிவித்தார்.
1954-ம் ஆண்டு இந்த யானை, குருவாயூர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. சுமார் 66 ஆண்டுகளாக கோயில் பராமரிப்பிலேயே இருந்தது. பத்மநாபன் யானை இறந்த செய்தியைக் கேட்டு பக்தர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago