வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது, ஏற்கெனவெ 18 ஆக அதிகரித்திருந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ராணுவத்தை அனுப்புமாறு உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி காவல்துறையினரால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜாமியா மாணவர்கள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன் கூடி வகுப்புவாதக் கலவரத்தை அடக்க நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர்.
தங்களை சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் மேலும் தங்கள் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்ததாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
போலீஸாரும் கும்பலைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடித்ததாக ஒப்புக் கொண்டனர். டெல்லி பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தனர்.
இதனையடுத்து டெல்லி பல்கலை மாணவர்கள் 8 பேர் உட்பட மொத்தம் 41 பேர் சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மேலும் இருவர் பலியாக டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago