இந்தியில் ட்வீட் செய்த ட்ரம்ப்; சமஸ்கிருதத்தில் பதில் கூறிய மோடி

By செய்திப்பிரிவு

சற்று நேரத்தி்ல் அகமதாபாத் வந்து சேரவுள்ள நிலையில் ட்ரம்ப் இந்தி மொழியில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் தெரிவிக்கையில் ‘‘இந்தியா வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறோம். வந்து கொண்டிருக்கிறோம். சற்று நேரத்தில் நாம் சந்திப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி ‘‘அதிதி தேவா பவ’ என விருந்தினர்கள் கடவுக்கு நிகரானவர்கள் என்ற சமஸ்கிருத பழமொழியை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்