முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பாததன் விலையையும், இந்துக்களை அழைத்து வராததன் விலையையும்தான் இந்தியா இப்போது கொடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.
இதற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ரவிசங்கர் பிரசாத், உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். சில பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பிஹார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
» ராமர் கோயில் அறக்கட்டளையில் உள்ள 15 உறுப்பினர்களில் 9 பேர் விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர்
» மிரளவைக்கும் அம்சங்கள்: அதிபர் ட்ரம்ப்பின் அதிநவீன ‘மரைன் ஒன்’ பிரத்யேக ஹெலிகாப்டர்
பிஹாரின் சீமாஞ்சல் மண்டலத்தில் புர்னியா மாவட்டத்தில் பெகுசாரி தொகுதி எம்.பி.யான கிரிராஜ் சிங் நேற்று ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நம்முடைய முன்னோர்கள் தீவிரமாகப் போராடினார்கள். ஆனால், அப்போது முஸ்லிம்களை ஒருங்கிணைத்து தனியாக ஒரு நாட்டை உருவாக்குவதில் முகம்மது அலி ஜின்னா தீவிரமாக இருந்தார்.
நம்முடைய முன்னோர்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். அனைத்து முஸ்லிம்களையும் அப்போதே பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும். அங்கிருந்து அனைத்து இந்துக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கான அவசியம் இருந்திருக்காது. அது நடக்கவில்லை. அதற்காகத்தான் நாம் இப்போது மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறோம்" என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் "பிஹார் முதலிடம்" என்ற பெயரில் மிகப்பெரிய பிரச்சாரத்தை ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் இன்று தொடங்கியுள்ளார்.
அப்போது சிராக் பாஸ்வான் மக்கள் மத்தியில் பேசுகையில், "மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். ஏற்கெனவே டெல்லி தேர்தலில் இதுபோன்று பிரித்தாளும் பேச்சை பாஜக தலைவர்கள் பேசித்தான் தோல்வியைச் சந்தித்தார்கள்.
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், நம்முடைய கூட்டணியில் கட்சியில் உள்ள பல தலைவர்கள் சிலர் நாங்கள் கூட்டணியில் ஒற்றுமையாக இல்லை எனக் கூறுகிறார்கள். அதற்கு கிரிராஜ் சிங் பேச்சு முக்கிய உதாரணம். இதுபோன்ற மனிதர் என்னுடைய கட்சியில் இருந்து இதுபோன்று பேசியிருந்தால், நான் பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்திருப்பேன்.
ஆனால், கூட்டணியில் உள்ள கட்சியின் முக்கியத் தலைவர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய, பிரித்தாளும் பேச்சைப் பேசுகிறார்கள். குறிப்பாக அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஸ் வர்மா போன்றோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்கள். டெல்லி மக்கள் அரசின் திறமையான செயல்பாட்டை மட்டும் பார்த்து வாக்களித்தனர். பிஹாரில் அதுபோன்ற சூழல் ஏற்பட வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரம் வளர வேண்டும்" என சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago