6 அடி உயர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிலை- தினமும் பூஜை செய்யும் தெலங்கானா ரசிகர்

By என்.மகேஷ்குமார்

அமெரிக்க அதிபரி டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வரும் 24-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலம், ஜங்கோவன் பகுதியை சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா, ட்ரம்பின் தீவிர ரசிகராவார். இந்தியா- அமெரிக்கா நாடுகள் இடையே நட்புறவு வளர வேண்டுமென இவர் தினமும் கடவுளை பிரார்த்தனை செய்வதோடு, இவருக்கு பிடித்த அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்பின் படத்தை தினமும் காலையில் பூஜை செய்து, பின்னர் அவரது அன்றாட வேலைகளை கவனித்து வருவதே அவரது பணியாகும். முதலில் இவர் செய்வதை இவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர்.

ஆனால், இவர் எதையும் கண்டுகொள்ள வில்லை. ட்ரம்ப் குறித்து பல புத்தகங்களை படித்தும், அவரது நடவடிக்கைகள், குறிக்கோள்கள் குறித்து அறிந்தும் அதனை அவரது நண்பர்களிடம் பகிர்வதை வாடிக்கையாக கொண்டார்.

இதனிடையே சமீபத்தில், அவரது வீட்டின் அருகே ட்ரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலையையே அவர் வைத்து விட்டார். மேலும், அந்த சிலைக்கு தினமும் பூஜைகளையும் அவர் தற்போது செய்து வருகிறார். இது குறித்து புஸ்ஸா கிருஷ்ணாவிடம் பேசியபோது, “டொனால்டு ட்ரம்ப் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பலதலைவர்களில் ட்ரம்ப்பை நான்அதிகம் நேசிக்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் நல்ல நட்பு நாடுகளாக விளங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. இதற்காக நான் தினமும் கடவுளை பிரார்த்திக்கிறேன். ட்ரம்ப் சிலையை சொந்த செலவில் செய்து வணங்கி வருகிறேன்.

தினமும் அபிஷேகம் செய்துபூஜை செய்கிறேன். அவரதுபடத்தை எனது சட்டைப்பையிலேயே வைத்து வழிபடுகிறேன். அவரது கோட்பாடுகள், கொள்கைகள் என்னை கவர்ந்தன. ஒரு மாதம் கஷ்டப்பட்டு அவரது சிலையை உருவாக்கினேன். ஆதலால், தற்போது இந்தியா வர உள்ள ட்ரம்பை காண ஆவலாக உள்ளேன். இதற்கு மத்திய அரசு எனக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். இதனை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்றார்.

ட்ரம்பை வழிபடுவதால், இவரது பெயர் ‘ட்ரம்ப்’ கிருஷ்ணாவாக மாறி விட்டது. இவரது நண்பர்கள் அனைவரும் இவரை அவ்வாறே அழைக்கின்றனர். இவர் வசிக்கும் வீடு கூட ‘ட்ரம்ப்’ வீடு என பெயர் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

இந்தியா

2 days ago

மேலும்