இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி மக்கள வையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டில் மாநில அரசு பணிகளில் எஸ்சி., எஸ்டி. பிரி வினருக்கு இடஒதுக்கீடு வழங்கா மல், காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித் தது. இதை எதிர்த்து உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு உத்தரவை ரத்து செய்தது. குறிப்பிட்ட பிரிவின ருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தராகண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ் வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடி வில், “இடஒதுக்கீடு இல்லாமல் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உரிமை உள்ளது. இடஒதுக்கீடு இன்றி அரசு பணிகளை நிரப்ப உத்தராகண்ட் அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும். இடஒதுக்கீடு வழங்கும்படி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று நீதிபதிகள் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினர்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த தீர்ப்பு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே ராகுல் காந்தி கூறும் போது, “இடஒதுக்கீடு முறையை அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலை வர் மோகன் பாகவத் ஆகியோர் எவ்வளவு கனவு கண்டாலும் அது நிறைவேறாது. இடஒதுக்கீட்டை அழிப்பது என்பது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மரபணுவில் உள்ளது” என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் மக்களவையில் நேற்று புயலை கிளப்பியது. இடஒதுக்கீடு விவ காரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ், முஸ்லிம் லீக், திமுக, சிபிஎம் கட்சிகள் கவன ஈர்ப்பு நோட்டீஸை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் வழங்கியிருந்தன. மக்களவையில் நேற்று காலை கேள்வி நேரம் தொடங்கியபோது இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். ஆனால் இதற்கு மக்களவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கோஷங்களை எழுப் பினர். இதனால் அவையில் கூச்ச லும் குழப்பமும் நிலவியது.
இதனிடையே, மத்திய பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசியதாவது: உத்தராகண்ட் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியலாக்கு கிறது.
உத்தராகண்ட் அரசு 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல் அறிவிக்கை வெளியிட்டபோது அந்த மாநிலத்தில் பதவியில் இருந்தது காங்கிரஸ். இடஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தது காங்கிரஸ்.
ஆனால் தற்போது இதனை மத்திய அரசுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் கட்சி அரசியலாக்கு கிறது. இதுபற்றி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பதில் அளிப்பார்” என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன் றத்தில் மத்திய அரசு உடனடியாக மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசும் போது, “இடஒதுக்கீட்டுக்கு ஆதர வாக இந்த அரசு இல்லை என் பதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கருது கிறேன். இந்த விஷயத்தில் மறு ஆய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும்” என் றார்.
பின்னர் இந்த பிரச்சினை தொடர் பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச் சர் தாவர்சந்த் கெலாட் ஓர் அறிக் கையை அவையில் தாக்கல் செய் தார். பின்னர் அவர் பேசும்போது, “2012-ம் ஆண்டில் உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொட ரப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி யுள்ளது. இதற்கும் மத்திய அரசுக் கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் மத்திய அரசு பிரதிவாதியாக சேர்க்கப்பட வில்லை, இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம், வாக்குமூலம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை, உச்ச நீதிமன்றம் கேட்கவும் இல்லை. உத்தராகண்ட் மாநிலத்தை காங் கிரஸ் கட்சி ஆண்டபோது தொடுத்த வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ்தான் காரணம்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அரசின் உயர் நிலை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுதொடர்பாக தனது முடிவை விரைவில் அறிவிக்கும். இந்த அரசு எஸ்சி., எஸ்டி. நலனுக்காக பாடுபட்டு வருகிறது. அவர்களின் நலனுக்கு எதிராக எந்த முடிவையும் அரசு எடுக்காது” என்றார்.
தீர்ப்புக்கு காங்கிரஸ்தான் கார ணம் என்று அமைச்சர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவை யிலிருந்து கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்தது. – பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago