நான் முஸ்லிம், எனது மனைவி இந்து, எங்கள் பிள்ளைகள் இந்தியர்கள் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களில் சிலர் சட்டத்தை எதிர்த்தும் வேறு சிலர் ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி நடிகர் ஷாருக்கான் பொதுவான சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
எங்கள் வீட்டில் இந்து, முஸ்லிம் என்று ஒருபோதும் விவாதித்தது கிடையாது. எனது மனைவி இந்து, நான் முஸ்லிம். எனது குழந்தைகள் இந்தியர்கள். ஒருமுறை எனது மகள் என்னிடம் வந்து ‘நம்முடைய மதம் என்ன' என்று கேட்டாள். நான் அவளுடைய விண்ணப்ப படிவத்தில் ‘இந்தியன்' என்று எழுதினேன். எங்களுக்கு மதம் கிடையாது.
எனது மகனுக்கு ஆர்யான் என்றும் மகளுக்கு சுஹானா என்றும் பொதுவான பெயர்களையே சூட்டியுள்ளேன். கான் என்ற அடைமொழி என்னுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. நான் தினமும் 5 முறை தொழுகை நடத்துவது கிடையாது. ஆனாலும் நான் முஸ்லிம். இஸ்லாம் நல்ல மதம். அதில் நல்லொழுக்கம் இருக்கிறது என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago