இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் சட்டங்கள் அதற்கான எதிர்ப்புகள் அதன் மீதான வழக்குகள் போலீஸ் நடவடிக்கைகள் ஆகியவற்றினால் குடிமை சுதந்திரம் அல்லது உரிமைகள் என்ற ஜனநாயகக் குறியீட்டில் 10 இடங்கள் இந்தியா சரிவு கண்டுள்ளது.
ஆசியாவில் சிங்கப்பூர், ஹாங்காங்கும் இந்த விஷயத்தில் பின்னடைவு கண்டுள்ளன. தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் 2019 ஜனநாயகக் குறியீடு நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் 165 நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டது.
கடந்த 2019ம் ஆண்டு கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே ஜனநாயக உரிமைகள் விஷயத்தில் பின் தங்கியுள்ளன. இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 என்று இருந்தது 2019-ல் 6.90 என்று பின்னடைவு கண்டுள்ளது.
குடிமை உரிமைகள் அல்லது சுதந்திரம் என்பது பெரிய அளவில் சரிந்துள்ளதால் இந்தியா 10 இடங்கள் பின்னடைவு கண்டு 51வது இடத்தில் இருக்கிறது.
2010-ம் ஆண்டு உலகப்பொருளாதார நெருக்கடி இருந்த போது கூட ஜனநாயக உரிமைக் குறியீடு இவ்வளவு பின்னடைவு காணவில்லை, ஆனால் 2019-ல் பின்னடைவு கண்டுள்ளது.
காஷ்மீரில் இணையதள முடக்கம், அங்கு அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தப் பின்னடைவில் தாக்கம் செலுத்தியதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் 2006-ல் இஐயு இந்த ஆய்வைத் தொடங்கிய போது இருந்ததை விட 2019-ம் ஆண்டு இந்தியா இந்த விஷயத்தில் பின்னடைவு கண்டுள்ளது.
இதற்கு அளவீடாக ‘முழு ஜனநாயகம்’, குறைபடு ஜனநாயகம், கலந்த ஜனநாயகம், எதேச்சதிகாரம் என்று 4 பிரிவுகளின் கீழ் புள்ளிகள் வழங்கப்பட்டதில் இந்தியா குறைபடு ஜனநாயகம் என்ற பிரிவில் உள்ளது. சீனா 153வது இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago