தலைநகர் அமராவதியை மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி குண்டூரில் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கல்லா ஜெயதேவ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.
ஆந்திர மாநிலம் தலைநகர் பிரச்சினையில் தத்தளிக்கிறது. அமராவதி மட்டுமே தலைநகராக இருக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அமராவதியில் சட்டமன்றம் மட்டுமே செயல்படுமெனவும், விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம், ஆளுநர் மாளிகையும், கர்னூலில் உயர்நீதி மன்றமும் செயல்படுமெனவும் புதிய அறிக்கையை முதல்வர் ஜெகன் வெளியிட்டார்.
இதற்கு நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதன்பிறகு சட்டமன்றத்தில் மசோதாவும் நிறைவேறியது. இரவு 11 மணி வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தில் இம்மசோதா பலத்த கூச்சலுக்கிடையே நிறைவேற்றப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் கண்டன பாதயாத்திரையில் ஈடுபட்டனர். இதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால், சந்திரபாபு நாயுடு உட்பட தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்களை வேனில் ஏற்றி விடிய, விடிய பல இடங்களில் சுற்றி திரிந்து கடைசியில் நள்ளிரவு சந்திரபாபு நாயுடுவை அவரது வீட்டிலும், மற்றவர்களை வெலகபுடி காவல் நிலையத்திலும் இறக்கிவிட்டனர்.
இதனிடையே, அமராவதி தலைநகருக்கு ஆதரவு தெரிவித்து, குண்டூர் எம்.பி. கல்லா ஜெயதேவ் நேற்று முன்தினம் ஆதரவாளர்களுடன் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஜெயதேவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி பல காவல் நிலையங்களுக்கு சுற்றி திரிந்தனர். இறுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மங்களகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் எம்.பி ஜெயதேவை ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் சிறைக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் குண்டூர் சிறையில் ஜெயதேவ் அடைக்கப்பட்டார்.
இதனை அறிந்த சந்திரபாபு நாயுடு உட்பட பல கட்சி நிர்வாகிகள் குண்டூரில் சிறைச்சாலை முன் திரண்டனர். இதனால் சிறைச்சாலை அருகே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நேற்று காலைஎம்.பி. ஜெயதேவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago