என்பிஆர் படிவத்தில் பெற்றோர் பிறப்பிடம் குறித்த விவரங்களை அளிக்க வேண்டிய கட்டாயமில்லை: மத்திய அரசு

By விஜய்தா சிங்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது படிவத்தில் உள்ள பெற்றோர் பிறப்பிடம் பற்றிய கேள்விக்கு மக்கள் விருப்பப்பட்டால் மட்டும் பதில் அளித்தால் போதும், கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல்-செப்டம்பரில் நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தேசியப் பொதுமக்கள் பதிவேடும் உடன் நிறைவேற்றப்படுகிறது, இதற்கான படிவத்தில் பெற்றோர் பூர்விகம் பற்றிய கேள்வியை அகற்றுமாறு பாஜக ஆட்சியல்லாத மாநில அரசுகள் இந்தியத் தலைமைப் பதிவாளரை கேட்டன.

என்பிஆர் மற்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியலிடப்படும் கட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது குறித்த இந்தியத் தலைமை பதிவாளர் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் நாள் முழுதுமான விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தின் போடு என்பிஆர், மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிக்கோள்கள் யாவை என்று எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படுவதால் அதன் பயன்களையும் விளக்கினர்.

தலைமைப் பதிவாளர் மற்றும் பிற உள்துறை அமைச்சக அதிகாரிகள் மாநில பிரதிநிதிகளிடம் விளக்குகையில், என்பிஆர் படிவத்தில் கேள்விகள் அனைத்திற்கும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை, விருப்பமுள்ளவற்றிற்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது என்று கூறினர்.

மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறும்போது, “மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர்-க்காக யாரும் ஆவணங்கள் எதையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. மக்கள் அவர்கள் விரும்பும் விவரங்களை அளித்தால் போதுமானது. தேசிய பொதுமக்கள் பதிவேட்டையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்