குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றம் சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற முதல் மாநிலம் கேரளாவாகும். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் கேரள கவர்னர் குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை. ஏனென்றால், குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசு செயல்படுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை என கூறினார்.
இதைத் தொடர்ந்து கேரள அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.
இதுகுறித்து கடும் கோபமடைந்த கேரள மாநில ஆளுநர் கூறியதாவது:
ஆளூநர்ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் ஆகும். அவ்வாறு செல்ல முடியுமா என்பதை நான் ஆராய்வேன்.
அவர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நான் அரசியலமைப்புத் தலைவராக இருப்பதால் அவர்கள் முதலில் எனக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்திரிகைகள் மூலம் அதைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். தெளிவாக கூறுகிறேன், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago