தேசியவாதக் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆதரவாளர்களிடையே மகாராஷ்ட்ராவில் மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிய போலீஸார் பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைக்க நேரிட்டது.
ஏபிவிபி-யின் நாசிக் கிளைக்கு வெளியே தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடும் குரலெடுத்து கோஷங்களை எழுப்பினர். என்சிபி கட்சியினர் தேசியக் கொடியையும் தங்கள் கட்சிக்கொடியையும் வைத்திருந்தனர். இவர்கள் பாஜகவையும் ஏபிவிபியையும் எதிர்த்து சத்தமாக கோஷமிட்டனர், ஜேஎன்யு வளாகத்தில் கடந்த நாள் நடந்த கும்பல் வன்முறைக்குக் காரணம் பாஜகவும் இவர்களும்தான் என்று சாடினர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இருதரப்பினரும் முஷ்டி உயர்த்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர் இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவியது.
அங்கு வந்த போலீஸார் இருவரையும் கலைத்தனர், சிலரை சுற்றி வளைத்தனர். இன்று மதியம் தேசிய வாத இளையோர் காங்கிரஸ் தலைவர் மெஹ்பூப் ஷைக் மற்றும் சிலர் நரிமண் பாயிண்ட்டில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்,
இவர்கள் தேசியக் கொடி, மகாத்மா காந்தியின் புகைப்படம், டாக்டர் அம்பேத்கர் புகைப்படம் ஆகியவற்றுடன் கோஷங்கள் எழுப்பினர். பாஜக, ஏபிவிபியை கடுமையாகச் சாடி கோஷமிட்டனர்.
அவுரங்காபாத்தில் தேசியவாத இளையோர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் பாஜக அலுவலகத்தை முற்றுகை இட்டனர், ஆனால் அங்கிருந்த பெரிய அளவிலான போலீஸாரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago