கேரள முஸ்லிம்களின் ஒரு மசூதியில் இருந்து குடும்பத்தின் திருமணம் நடைபெற உள்ளது. மதநல்லிணக்கதை போற்றும் வகையிலான இந்த நிகழ்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரளாவின் காயங்குளம். இந்நகரில் உள்ள செருவாலி முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி உள்ளது. இதன் அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிந்து என்ற பெண் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது இளையமகனை 10 ஆம் வகுப்பு தேர்விற்கு விடச் சென்ற போது நகைப்பட்டரை கொல்லரான தந்தை அசோகன் மாரடைப்பால் இறந்து விட்டார்.
தற்போது அஞ்சுவிற்கு அப்பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19 இல் மணமாக உள்ளது. இதற்கான மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், அவருக்கு உதவி வரும் முஸ்லிம் குடும்பத்தாரிடம் உதவி கேட்டிருக்கிறார் பிந்து. இக்குடும்பத்தின் தலைவரான அலூமூத்தில் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ளார்.
எனவே, கடந்த வெள்ளிக்கிழமை பிந்துவின் கோரிக்கையை தொழுகைக்கு வந்தவர்கள் முன்வைக்க அனைவரும் மசூதி வளாகத்தில் நடத்த சம்மதித்தனர். இதையடுத்து வரும் ஜனவரி 19 இல் அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து மணமக்களின் திருமணம் நடைபெற உள்ளது.
இது குறித்து அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத்தில் கூறும்போது, ‘கேரளாவில் முதன்முறையாக இந்த இந்து மணமக்களின் திருமணம் மசூதியில் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதிலும் மதநல்லிணக்க சுழல் பாதிக்கப்பட்டு வரும் நிலை இது அதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம்.’ எனத் தெரிவித்தார்.
கடந்த ஒரு பத்து நாட்களில் இதுபோல் மதநல்லிணக்க முன் உதாரணம் நிகழ்ச்சி கேரளாவில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 29 இல் எர்ணாகுளத்தின் மூவாத்துபுழாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முஸ்லிம்களுக்கு மாலைநேர தொழுகை முடிக்க வேண்டி இருந்தது. அருகில் மசூதிகள் எதுவும் இல்லாமையால் அங்கிருந்த செரியாபள்ளி பர்தோமா எனும் கிறித்துவ ஆலயம் அதற்காக தன் கதவுகளை திறந்து தொழுகை நடத்த அனுமதித்திருந்தது நினைவுகூரத்தக்கது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago