தற்போது பேரணி நடத்துபவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 70 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை?- பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

By இரா.வினோத்

பாகிஸ்தானில் தலித்துகளும் சிறுபான்மையினரும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள னர். அவர்களுக்காக பாகிஸ்தா னுக்கு எதிராக 70 ஆண்டுகளாக பேசாமல், தற்போது எதிர்க்கட்சிகள் ஏன் பேரணி நடத்திக்கொண்டிருக் கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

2 நாட்கள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து தும்கூரு சென்ற மோடி சித்தகங்கா மடத்தில் மறைந்த சிவகுமார சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினார். பின்னர் தும்கூரு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் விருதுகள் வழங்கி, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச் சியையும் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: 2020-ம் ஆண்டில் பல்வேறு வழிகளிலும் நாட்டை முன் னேற்ற அரசு கடுமையாக உழைத்து வருகிறது. மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர், தரமான மருத் துவம், காப்பீடு, கேஸ் உள்ளிட்ட வற்றை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். முன்பெல்லாம் அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையாத வகையில், நடுவில் இருப்போரே அதிகமாக லாபம் அடைந்தனர். ஆனால் தற்போது அனைத்து நலத்திட்டங்களின் நிதி உதவியும் மக்களின் வங்கி கணக் குக்கே நேரடியாக சென்று அடைகிறது.

மதத்தை அடிப்படையாக கொண்டே பாகிஸ்தான் உரு வானது. அங்கு தலித்துகள், இந்துக் கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தான் கார்கில் போரின்போது சிறுபான்மையினர் தங்கள் உயிரை யும், பிள்ளைகளின் உயிரையும் காப்பாற்றுவதற்காக இந்தியா வுக்குள் தஞ்சம் அடைந்தனர்.

70 ஆண்டுகளாக இன்ன லுக்கு ஆளாகிவரும் இவர்களுக் காக காங்கிரஸும் அவர்களின் ஆதரவாளர்களும் எதுவும் பேச வில்லை. பாகிஸ்தானை கண் டித்து பேரணி நடத்தவில்லை. பாகிஸ்தானில் துன்புறுத்தப்படு வோருக்காக 70 ஆண்டுகளாக எதுவும் பேசாதவர்கள், தற்போது பேரணி நடத்தி கொண்டிருப்பது ஏன்? பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ் தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை யினரை எங்களால் கைவிட முடி யாது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந் தியாவுக்கு இருக்கிறது.

இப்போது இந்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர் களால் பாகிஸ்தானுக்கு மறைமுக ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நடந்துவரும் மதவாத செயல் பாட்டை சர்வதேச அளவில் அம் பலப்படுத்த வேண்டியுள்ளது. எனவே போராடுபவர்கள் இந்தியா வுக்கு எதிராக செயல்பட்டுவரும் பாகிஸ்தானுக்கு எதிராக பேச வேண்டும். பாகிஸ்தானில் துன் புறுத்தலுக்கு ஆளாகியுள்ள சிறுபான்மையினருக்காக போராடுபவர்களின் குரல் ஒலிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்