தசம ஆண்டை கணக்கிடுவதில் நீடிக்கும் குழப்பம்

By செய்திப்பிரிவு

தசம ஆண்டைக் கணக்கிடுவதில் பல ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வருகிறது. அந்தக் குழப்பம் 2019-ம் ஆண்டு முடிந்ததைத் தொடர்ந்து இப்போதும் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக தசம ஆண்டுகள் (10 ஆண்டுகள்) 0-வில் தொடங்கி 9-ல் முடியும். உதாரணமாக 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கும் தசம ஆண்டு 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி நிறைவடையும். இவ்வாறுதான் தசம ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையை சிலர் ஏற்றுக்கொள்கின்றனர். சிலர் ஏற்பதில்லை. தசம ஆண்டுகள் 1-ல் தொடங்கி 10-ல்தான் நிறைவடைகிறது என்று ஒரு தரப்பினர் வாதம் செய்து வருகிறார்கள்.

இது கணிதத்துக்கும், வரலாற்றுக்கும் இடையிலான வாதமாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. தொழில்நுட்ப முறையில் எது சரி என்று பார்த்தால் 2011-ல் தொடங்கும் தசம ஆண்டு 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிதான் முடிவடையும்.

தற்போது நாம் கிறிஸ்துவுக்கு முன் (கி.மு), கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி) என்று ஆண்டுக் கணக்கைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையைக் கண்டுபிடித்தவர் டியோனிசியஸ் எக்சிகுஸ் என்ற துறவி. இவர்தான் இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டை கண்டறிந்து அதற்கு 1-ம் ஆண்டு பெயர் கொடுத்தவர். அதன்படி கிறிஸ்து பிறப்பானது 1-ம் ஆண்டுதான் என்று கணக்கிடப்படுகிறது. 0-வில் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதன்படி கணக்கிட்டால் தசம ஆண்டு 1 முதல் 10-ம் ஆண்டு இறுதி வரையிலான காலம் வரை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

நாம் கணக்குப் பாடத்தில் படித்ததும் 1 முதல் 10 வரையிலான எண் கணக்குதான். 10-ம் எண்ணில் தான்பூஜ்ஜியம் வருகிறது. எனவே 1முதல் 10 வரையிலான ஆண்டுகளையே தசம ஆண்டு என்று தொழில்நுட்ப முறையில் கணக்கிடவேண்டும் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் ‘டீம் ஜீரோ’ என்றுஅழைக்கப்படும் மற்றொரு பிரிவினர் இதை ஏற்க மறுக்கிறார்கள். மரபுசார்ந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். வரலாற்றின்படி தசம ஆண்டுகள் 0 முதல் 9 வரை கணக்கிடப்படுகிறது. உதாரணமாக 1950 முதல் 1959, 1960 முதல் 1969, 1980 முதல் 1989 என கணக்கிடப்படுகிறது.

50-களில் என்று அழைக்கப்படும்போது அது 1950 முதல் 1959 வரையிலான காலத்தை மட்டுமே குறிக்கிறது. எனவே 2010-2019, 2020-2029 என்பதே தசம ஆண்டுகள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

முடிவாக தொழில்நுட்ப முறையில் பார்த்தால் இந்த தசம ஆண்டு 2020-ல்தான் நிறைவடைகிறது. ஆனால் மரபுப்படி பார்த்தால் தசம ஆண்டு 2019 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது என்றே கொள்ளவேண்டும்.

கத்தரிக்காய், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவை பழவகைகளே. ஆனால் நாம் அவற்றைகாய்கறிகள் என்றுதான் அழைக்கிறோம். அதேபோல் மக்கள் தொழில்நுட்ப முறையை மறந்துவிடுகின்றனர். வழக்கத்தில் மக்கள் அதிகமாக என்ன முறையைப் பயன்படுத்தி வருகின்றனரோ அதையே தொடர்கின்றனர். இங்குதான் அறிவியலை, அதிகம் பயன்படுத்தும் முறை வெற்றி கொள்கிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்