மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் புதிதாக ராணுவ விவகாரத்துறை என ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த துறைக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமைத் தளபதிதான் தலைவராக இருப்பார் அதாவது ஜெனரல் பிபின் ராவத் தலைமையின் கீழ் அந்த துறை இயங்கும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
இதன் மூலம் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த திருத்தங்கள் படி பாதுகாப்பு துறையில் 5 வகையான பிரிவுகள் அல்லது துறைகள் இனி செயல்படும். பாதுகாப்புத் துறை, ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்பு உற்பத்தி துறை, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலத்துறை என 5 துறைகள் செயல்படும்.
நம் நாட்டில் இப்போது தரைப்படை விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர். ஆனால், போர்க்காலங்கள், அவசர நேரத்தில் இந்த மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த, வழிநடத்தத் தலைமைத் தளபதி என்று இல்லை, இதற்கான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. இது கார்கில் போரின்போது உணரப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் கடந்த 24 ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த புதிய தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைக்கான தலைமைத் தளபதிக்கான பணிகள், கடமைகள் குறித்து மத்திய அரசு இன்று அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- தரைப்படை, கடற்படை, விமானப்படை தளபதிகளுக்கு உடையில் 3 நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில் தலைமை தளபதிக்கு 4 நட்சத்திரங்கள் வழங்கப்படும்.
- தலைமைத் தளபதி 65 வயது வரை பணியாற்றும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
- ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு ஒரேமுனை ஆலோசகராக பிபின் ராவத் செயல்படுவார். ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படையை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதில் இவர் கவனம் செலுத்துவார்.
- புதிதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரத்துறை ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் இயங்கும். தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பணிகளை, முப்படைகளுக்கும் முழுமையான தேவைகளை புதியதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரத்துறை கவனிக்கும்.
- வளங்களை உச்சக்கட்டமாகப் பயன்படுத்தி, ராணுவ காமாண்ட்களை ஒருங்கிணைத்து மறுகட்டமைத்து, செயல்பாட்டளவில் ஒருங்கிணைக்கும் பணிகளைச் செயல்படுத்தும். தற்போது நாட்டில் மொத்தம் 19 காம்ண்ட்கள் உள்ளனர். அவர்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துதல் முக்கியப் பணியாகும்.
- பணியாளர்களைத் தேர்வு செய்தல், பயிற்சி அளித்தல், சேவைப்பணிக்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தேவைக்கு ஏற்றார்போல் கூட்டாகத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள், ஆயுதங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்துதல்.
- பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவத் தலைமையகம், கடற்படை தலைமையகம், தரைப்படைத் தலைமையகம், விமானப்படை தலைமையகம் ஆகியவை இருக்கும் நிலையில், தற்போது ராணுவ விவகாரத்துக்கும் தனியாகத் தலைமையகம் உருவாக்கப்படும்.
- இனிமேல், பாதுகாப்புத் துறையில் 5 வகையான பிரிவுகள் அல்லது துறைகள் செயல்படும். பாதுகாப்புத் துறை, ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலத்துறை என 5 துறைகள் செயல்படும்
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago