காங்கிரஸ் தலைவர் பிரியாங்கா காந்தி வதேரா உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிட்டு காவி உடை குறித்து தன் கருத்தைத் தெரிவித்ததையடுத்து உ.பி. முதல்வர் அலுவலகம் ட்வீட்டில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரியங்கா காந்தி திங்களன்று தெரிவிக்கும் போது, ‘யோகி காவி உடை அணிந்துள்ளார், காவி என்பது இந்திய ஆன்மீக உணர்வின் குறியீடு. இது இந்துமதத்தின் குறியீடு. அவர் மத நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும், இங்கு பழிவாங்கவோ, வன்முறைகளுக்கோ இந்து மதத்தில் இடமில்லை’ என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து உ.பி. முதல்வர் அலுவலகம் தன் ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
“முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு காவி உடையைப் பொதுச்சேவைக்காக அணிந்துள்ளார். அவர் காவி உடையை வெறுமனே அணியவில்லை, அதனை பிரதிநிதித்துவமும் செய்கிறார்.
காவி உடை என்பது பொதுநலன் மற்றும் தேசக்கட்டுமானம் தொடர்புடையது. யோகிஜி இந்தப் பாதையில் பயணிப்பவர்.
சன்யாசியின் பொதுநலன், பொதுச்சேவை பாதைக்கு ஊறு விளைவிப்பவர் தண்டனையை எதிர்கொள்வார்கள்.
அரசியலுக்குள் பரம்பரை மூலம் உள்ளே நுழைந்தவர், நாட்டை புறக்கணித்து திருப்திபடுத்தும் அரசியலில் இறங்குபவர்களுக்குப் பொதுச்சேவை பற்றி என்ன தெரியும்?” என்று பதிவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago