தென் இந்தியாவில் புகழ்பெற்று விளங்கிவரும் கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.
உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் ஜீயர் ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமி, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற விஸ்வ இந்து பரிசத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். தனது 8 வயதிலேயே துறவு வாழ்வுக்கு வந்துவிட்ட விஸ்வேஷா சுவாமி, முற்போக்கான சிந்தனைகள் கொண்டவர்.
கடந்த 1931-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி தட்சின கன்னடாவில் உள்ள ராமகுஞ்சா எனும் கிராமத்தில் நாராயணாச்சார்யா , கமலாம்மாள் என்பவருக்கு விஸ்வேஷா மகனாகப் பிறந்தார். தனது 8-வது வயதில் துறவு வாழ்கைக்குத் திரும்பி, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார். பெஜாவர் மடத்தின் 33-வது ஜீயராக உயர்ந்தார். விஸ்வேஷா தனது ஆன்மீகக் கல்வியை பந்தார்கேரி மடத்தின் வித்யாமான்யா தீர்த்த சுவாமிகளிடம் கற்றத் தேர்ந்தார்.
வயது மூப்பு காரணத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஸ்வேஷா சுவாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து விமானம் மூலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்துக்கு அழைத்து வரப்பட்டார். மடத்துக்கு அழைத்துவரப்பட்ட சில மணிநேரங்களில் விஸ்வேஷா சுவாமியின் உயிர் பிரிந்தது.
பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா சுவாமி மறைவுக்கு கர்நாடக அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
பெஜாவர் மடத்தின் முறைப்படி அனைத்து பாரம்பரிய பூஜை முறைகளும் மாலை 3 மணி முதல் 6 மணிவரை மக்கள் பார்வைக்கு விஸ்வேஷா சுவாமியின் உடல் வைக்கப்படும். அதன்பின் பெஜாவர் மடத்தின் வழக்கப்படி, இந்து முறைப்படி விஸ்வேஷா சுவாமியின் உடல் மூங்கில் கூடையில் வைத்து அடக்கம் செய்யப்படும்.
பெஜாவர் மடத்தின் ஜூயர் விஸ்வேஷா சுவாமி, தன் வாழ்நாளில் சீர்திருத்தச் சிந்தனைகளையும், முற்போக்கான எண்ணங்கள் கொண்டவராக இருந்தார். தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் சென்று சமூக முன்னேற்றப் பணிகளைச் செய்தார்.
தலித் மக்களுடன் சேர்ந்து உணவு அருந்தும் சஹபோஜனா திட்டத்தை அறிமுகம் செய்து இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜீயர்களில் சீர்திருத்தவாதியாக இருந்த விஸ்வேஷா சுவாமி, இந்து மதங்களில் உள்ள நம்பிக்கைகள், பிரச்சினைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளார், சாதிமுறையில் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு போன்றவற்றையும் அளித்துள்ளார். அரசியலிலும், மத நம்பிக்கைகளிலும் விஸ்வேஷா கூறிய கருத்துக்கள் பல நேரங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெஜாவர் மடத்தின் ஜீயர் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், " லட்சக்கணக்கான மக்களின் மனதில் இருந்து எப்போதும் ஒளி கொடுத்து வழிகாட்டுபவராகவும், உடுப்பி மக்களின் மனதிலும் பெஷாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா இருப்பார். சேவை மனப்பான்மை மற்றும் ஆன்மீகத்தின் சக்தி பீடமாக இருந்து இரக்கத்துடன் சமூகத்துக்குத் தொடர்ந்து பணியாற்றினார். ஓம் சாந்தி
ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமியிடம் இருந்து கற்றுக் கொள்ள பல வாய்ப்புகளைப் பெற்ற ஆசிர்வதிக்கப்பட்டவராக நான் என்னைக் கருதுகிறேன். குரு பூர்ணிமா அன்று அவருடன் சமீபத்தில் நான் சந்தித்தது மறக்க முடியாதது. அவரின் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவு எப்போதும் வியக்க வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் " இந்து மதம் மிகப்பெரிய வழிகாட்டியை இழந்துவிட்டது. தலித்களுடன் அமர்ந்து சஹபோஜனா திட்டத்தை தொடங்கி, இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார் " எனத் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago