சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்கு

By பிடிஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, பல்கலைக்குள் புகுந்து போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். ஜாமியா மிலியா மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 60 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர், விசாரணை நடத்தியதில் போலீஸார் மாணவர்களுக்கு ஆத்திரத்தைத் தூண்டும் விதத்தில் நடந்துள்ளனர். ஜாமியா பல்கலைழகத்தைக் காட்டிலும் மோசமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தனர்

இந்நிலையில் போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 1200 மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் மீது 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், மேலும் ஆயிரம் மாணவர்கள் மீது கலவரம் செய்தல், பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் போலீஸார் கடந்த 23-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதலில் 10 ஆயிரம் மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், போலீஸ் கூடுதல் எஸ்பி. ஆகாஷ் குலாஹரி கூறுகையில் " 10 ஆயிரம் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது தவறு. எழுத்துப்பிழை காரணமாக ஆயிரம் என்பது 10 ஆயிரமாக அறியப்பட்டது. ஆனால், ஆயிரம் மாணவர்கள் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்