பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் பேரழிவு தரக்கூடியது என்பிஆர், என்ஆர்சி: ராகுல் காந்தி காட்டம்

By பிடிஐ

2016-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் பேரழிவு தரக்கூடியது தேசிய குடிமக்கள் பதிவேடு(என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காட்டமாகப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டு 135-வது ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, ஏ.கே.அந்தோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்

அதன்பின் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:

ஏராளமான நகைச்சுவைகள் 2-வது பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடக்கப் போகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் பேரழிவு தரக்கூடியது தேசியக் குடிமக்கள் பதிவோடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பை என்ஆர்சியும், என்பிஆரும் தரும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே ஏழைகள் அனைவரிடமும் நீங்கள் இந்தியரா அல்லது இல்லையா என்று கேட்பதுதான். பிரதமர் மோடியின் 15 நண்பர்களிடமும் எந்தவிதமான ஆணவங்கள் இருக்கிறதா என்றும் அதைக் காண்பியுங்கள் என்றும் கேட்கமாட்டார்கள். இதில் உருவாக்கப்படும் பணம் 15 முக்கிய நண்பர்களின் பாக்கெட்டுக்குத்தான் செல்கிறது. பெருமுதலாளிகளுக்கு அதிகாரிகள் உதவி செய்வதைத்தான் இந்த அரசு ஊக்கப்படுத்துகிறது.

இந்தியாவில் எந்தவிதமான தடுப்புக் காவல் முகாம்களும் இல்லை. நீங்கள் என்னுடைய ட்வீட்டை பார்க்கலாம். பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவிதமான தடுப்புக் காவல் முகாம்களும் இல்லை என்று பேசும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் தடுப்புக் காவல் முகாம்கள் இருப்பது வீடியோவில் தெரியும். யார் பொய் பேசுவது என்பதை முடிவு செய்யுங்கள்’’

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்