குடியுரிமை சட்டம் தொடர்பாக நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம் நிற்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று காங்கிரஸும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
பாஜக தலைமையிலான அரசின் காலவரிசைத் திட்டத்தை நீங்கள் (இளைஞர்கள்) புரிந்துகொள்ளவேண்டும். முதலில் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று உறுதி அளிக்கின்றனர். இதன் மூலம் ஆட்சியில் அமர்கின்றனர். அதன்பிறகு உங்கள் பல்கலைக்கழகங்களை அழிக்கின்றனர். அதன்பிறகு நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் அழிக்கின்றனர். பின்னர் நீங்கள் போராட்டம் நடத்துகிறீர்கள். இதன்பிறகு உங்களை முட்டாள்கள் என்று அவர்கள் அழைக்கின்றனர். ஆனால் இளைஞர்களின் போராட்டம் நிற்காது…அடங்காது. இவ்வாறு இந்தியில் ட்விட்டரில் பிரியங்கா தெரிவித்துள்ளார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago