குடியுரிமைச் சட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்

By செய்திப்பிரிவு

யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா, இதனை நிரூபிக்க தயாரா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மை மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என திட்டமிட்டு வதந்தி கிளப்பப்படுகிறது. ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். இதுபோன்ற ஒரு நிகழ்வையாவது அவர் நிரூபிக்க முடியுமா. இந்திய குடிமக்கள் யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்