ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க 18 வயதை எட்டிய மாணவர்கள் வாக்களிக்க முடியும் எனில் சட்டத்தை எதிர்க்க அவர்களுக்கு உரிமையில்லையா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
24 பர்கானாஸ் மாவட்டத்தைச்சேரந்த நய்ஹாத்தி நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்று மம்தா இதுகுறித்து கூறியதாவது:
குடியுரிமை போன்ற நாட்டு மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. சர்ச்சைக்குரிய சிஏஏவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.
18 வயதை எட்டிய மாணவர்கள், அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்க முடியும் என்றால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மட்டும் எப்படி உரிமை இல்லாமல் போகும் என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.
கடுமையான சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது? எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அவர்களை பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்றுகிறது.
யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை. நான் உயிருடன் இருக்கும் வரை சிஏஏ மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படமாட்டாது. மக்கள் அஞ்சவேண்டாம். மேற்கு வங்கத்தில் எந்த தடுப்புக்காவல் மையமும் இருக்காது.
இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago