அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு இல்லாமல் தேசத்தின் பொருளாதாரம் இயங்க முடியாது: ராகுல் காந்தி பேச்சு

By பிடிஐ

சமூகத்தில் ஒவ்வொரு தரப்பு மக்களின் பங்களிப்பு இல்லாமல் தேசத்தின் பொருளாதாரம் இயங்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்திப் பேசினார்

தேசிய பழங்குடியினர் நடன திருவிழா 2019- என்ற தலைப்பில் ராய்பூரில் இன்று நிகழ்ச்சியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:

தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் சகோதரர்கள் அடித்துக்கொண்டு சண்டையிடும்போது அதில் எந்த லாபமும் பார்க்க முடியாது.

இந்த நாட்டின் சூழல் உங்களுக்குத் தெரியும், மற்ற மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். விவசாயிகள் தற்கொலை, பொருளாதாரச் சீரழிவு, வேலையின்மை குறித்து உங்களுக்கு அனைத்தும் தெரியும். இவை அனைத்தும் மீண்டும் வர வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நான் ஒன்று கூற விரும்புகிறேன், ஒவ்வொரு மதத்தினர், ஒவ்வொரு சாதியினர், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரின் பங்களிப்பு இல்லாமல் தேசத்தின் பொருளாதாரம் இயங்க முடியாது.

மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், ஆனால், அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி நாடு இருக்க வேண்டும். வேலையின்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் களையாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. எதையும் பிளவுபடுத்தியும் எந்த ஆதாயமும் அடைய முடியாது. தேசத்தில் சகோதரர்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்ளும்போது எந்தவிதமான பலனும் தேசத்துக்குக் கிடைக்காது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்