‘‘ஜெயசந்திரன் போல சதி செய்து பாஜகவை தோற்கடித்து விட்டார்கள்’’ - ரகுபர் தாஸ் ஆவேசம்

By செய்திப்பிரிவு

ராஜபுத்திர மன்னன் பிரித்விராஜ் சவுகானை உறவினர் ஜெயசந்திரன் எதிரிகளுடன் கைகோர்த்து சதி செய்து தோற்கடித்தது போல ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக சதியால் தோற்டிக்கப்பட்டு விட்டது என அம்மாநில பாஜக மூத்த தலைவர் ரகுபர் தாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.

ஜார்க்கண்டில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 81 இடங்களில் 79-ல் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவளித்தது. மற்றொரு தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு (ஏஜேஎஸ்யு) தலைவர் சுதேஷ் மஹதோவுக்கு எதிராக பாஜக போட்டியிடவில்லை.

முன்னாள் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (43), காங்கிரஸ் (31), லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (7) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் (ஜேவிஎம்) ஏஜேஎஸ்யு கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், ஜேஎம்எம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 1 இடங்களில் வெற்றி பெற்றன.

இதையடுத்து, ஜேஎம்எம் தலைமை யில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இக்கட்சியின் செயல் தலைவரும் சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன் 2-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் ராஞ்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரும், தற்போதைய பொறுப்பு முதல்வருமான ரகுபர் தாஸ் கூறியதாவது:

‘‘ராஜஸ்தானில் சுல்தானிய மன்னர்கள் படையெடுத்து வந்தபோது மன்னர் பிரித்விராஜ் சவுகான் தீரத்துடன் போராடினார். ஆனால் அவரது உறவினரான ஜெயச்சந்திரன் சதி செய்து எதிரிகளுடன் கைகோர்த்து மாவீரர் பிரித்விராஜ் சவுகனை தோற்கடித்தார்.

இதுபோலவே ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக சதியால் தோற்டிக்கப்பட்டு விட்டது. சில சதிகாரர்களின் எண்ணத்தால் எதிரிகள் தற்போது வென்றுள்ளனர். ஆனால் இந்த வெற்றி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. சதியை தோற்கடித்து மீண்டும் வெல்லுவோம்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்