மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.8,754 கோடியும் மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.
மக்கள் தொகை பதிவேட்டின் போது எவ்வித ஆவணங்களும் கேட்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப் படை என முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதியை நியமிக்கவும் திவால் அவசர சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
அடல் புஜல் யோஜ்னா திட்டத் தில் நீர்வள மேலாண்மைக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங் களில் 8,350 கிராமங்களில் நீர்வள மேலாண்மை திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
திவால் அவசர சட்டம்
கடந்த 12-ம் தேதி மக்களவையில் திவால் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தில் (ஐபிசி) மேலும் திருத்தங்கள் செய்து அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரயில்வே வாரியத்தை மறு சீரமைப்பு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே வாரியத்தில் தற்போது தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் உள்ளனர். மறுசீரமைப்புக்குப் பிறகு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெறுவர்.
தலைமைத் தளபதி
ராணுவம், கடற்படை, விமா னப்படை என முப்படைகளுக்கும் சேர்த்து தலைமைத் தளபதி பத வியை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய தலைமைத் தளபதி 4 நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெனரலாக இருப் பார். ராணுவ விவகாரங்களின் துறை தலைவராகவும் அவர் செயல்படுவார்.
மக்கள் தொகை கணக்கெடுப் புக்கு ரூ.8754.23 கோடியும் மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடியும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்கள் ஏற்பு
தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பின்போது எவ்வித ஆவ ணங்களும் கேட்கப்படாது. மக்கள் அளிக்கும் தகவல்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும். மொபைல் போன் செயலியின் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்த திட் டத்தை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.
அசாமில் அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப் பட்டது. அந்த மாநிலத்தை தவிர்த்து இதர மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கப்படும். இதில் குழப்பம் தேவையில்லை.
என்.ஆர்.சி. கிடையாது
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரிக்கப் பட்டது. இப்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பிக்கப்படுகிறது. என்.பி.ஆர். பதிவேட்டில் இருந்து என்.ஆர்.சி. பதிவேடு தயாரிக்கப்படாது.
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை என்.பி.ஆர். புதுப்பிக்கும் பணி நடைபெறும். வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் தப்படும். இந்த களப்பணிகளுக்காக 30 லட்சம் ஊழியர்கள் ஈடு படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர்கள் தெரி வித்தனர்.
என்பிஆர் பதிவேட்டில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்?
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) என்பது இந்திய குடிமக்களின் பதிவேடு ஆகும். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) இது கிராமம்/பேரூராட்சி, துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய வாரியாக தயாரிக்கப்படுகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக தங்கியிருப்பவர்கள், அதற்கு மேல் தங்கியிருப்பவர்கள் அல்லது அடுத்த 6 மாதம், அதற்கு மேல் தங்க விரும்புகிறவர்கள், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் வருவர்.
இதன் நோக்கம் என்ன?
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரின் விரிவான அடையாளங்கள், விவரங்களை சேகரிப்பதுதான் என்பிஆர்-ன் நோக்கமாகும். இதில் ஆதார், செல்போன் எண், பான் எண், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, இந்திய பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்.
குடும்பத் தலைவரின் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் விவரம், அவர்களுக்கும் குடும்பத் தலைவருக்கும் உள்ள உறவு, தந்தை பெயர், தாயார் பெயர், திருமணமானவராக இருந்தால் மனைவியின் பெயர், பாலினம், பிறந்த தேதி, மணமானவரா, பிறந்த இடம், பிறந்த நாடு, தற்போதுள்ள முகவரி, தற்போதைய முகவரியில் எத்தனை காலமாக வசித்து வருகிறார், நிரந்தர முகவரி, தொழில், கல்வித் தகுதி போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.
என்பிஆர்-ன் தற்போதைய நிலவரம்?
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது என்பிஆர் தகவல்களும் கடந்த 2010-ம் ஆண்டு சேகரிக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு வீட்டுக்கு வீடு சர்வே எடுத்ததன் மூலம் இந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி நடந்து முடிந்துள்ளது. மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். அசாமில் இது நடைபெறாது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago