கார்னேஷன் ஆட்டோ இந்தியா என்ற நிறுவனத்தின் தலைவரான முன்னாள் மாருதி உத்யோக் நிர்வாக இயக்குநர் ஜக்தீஷ் கட்டார் மீது ரூ.110 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.
பஞ்சாப் நேஷனள் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ இவர் மீது சமீபத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவரது புதிய நிறுவனம்தான் கார்னேஷன் ஆட்டோ இந்தியா லிமிடெட் ஆகும்.
கட்டார் மாருதி உத்யோகில் நிர்வாக இயக்குநராக 1993ம் ஆண்டு முடல் 2007 வரை பணியாற்றினார், அதிலிருந்து பிறகு ஓய்வு பெற்றார் அவர்.
மாருதி உத்யோகிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கார்னேஷன் இந்தியா நிறுவனத்தை அவர் அறிமுகம் செய்தார், இதற்காக ரூ.170 கோடி 2009-ம் ஆண்டு வங்கிக் கடன் பெற்றார். 2015-ல் இந்த கடன் செயலில் இல்லாத சொத்து என்று அறிவிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர். கூறுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களுக்கு ரூ.110 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது புகார் அளித்ததையடுத்து இவர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago