குடியுரிமை இல்லாதவர்களை தங்க வைக்க அசாம் மாநிலத்தில் தடுப்பு காவல் முகாம்கள்: மத்திய அரசு அமைக்கிறது

By செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து போராட்டம் நடந்து வரும்நிலையில், அசாம் மாநிலத்தில் குடியுரிமைகிடைக்கா தவர்களை தங்க வைப்பதற்காக தடுப்பு காவல் முகாம்களை மத்திய அரசு கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்துவந்த சுமார் 20 லட்சம் பேர் அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் அசாம் ஒப்பந்தத் தின்படியும் அசாம் மாநிலத்தில் தேசியகுடிமக்கள் பதிவேடு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேர் சேர்க்கப்பட வில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால், சட்ட விரோதமாக அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவியுள்ளவர்களை அடையாளம்காணவே தேசிய குடி மக்கள் பதிவேடு வெளியிடப்பட் டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்கமேல்முறை யீடு செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. பிறப்பு சான்றிதழ், பலஆண்டுகளாக இந்தியா வில் தங்கியிருப்பதற்கான ஆவ ணங்களை அதற்கு ஆதாரமாக அளிக்கலாம். மேலும், தேசிய குடி மக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்கள் 120 நாட்களுக்குள் ‘வெளிநாட்டி னர் தீர்ப்பாயத்தில்’ முறையிடலாம். இதில் தீர்வுகிடைக்காவிட்டால், அசாம் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். கடைசியாக உச்ச நீதிமன்றத்திலும் முறையிடலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், எல்லா நிலைகளிலும் குடியுரிமை கிடைக்க பெறாதவர்கள் நிலை என்ன என்பது குறித்து இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அல்லது குடியுரிமை இல்லாதவர்களை தடுப்பு காவலில் தங்க வைப்பதற்காகஅசாம் மாநிலத்தில் மத்திய அரசு முகாம்களைகட்டி வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளி யாகி உள்ளன. அசாமில் 10 தடுப்பு காவல்முகாம்கள் கட்டப்பட உள்ளதாகவும், அவற்றில்ஒன்று கோல் பாரா பகுதியில் கட்டப்பட்டு வருவ தாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முகாம் கால்பந்தாட்ட மைதானத்தை போல 7 மடங்கு பெரிய அளவில் உள்ளதாகவும், அங்கு 3000 பேர் வரை தங்க வைக்கும் வகையில் கட்டப் படுவதாகவும் செய்திகள் வெளி யாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்