குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம்; டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பதற்றம் பரவுகிறது- உத்தரபிரதேசத்தில் வன்முறையில் 6 பேர் உயிரிழப்பு, 3000 பேர் கைது; 15 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து

டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குடி யுரிமை திருத்த சட்டத்துக்கு எதி ரான போராட்டங்கள் வலுவ டைந்து வருகின்றன. வடமாநிலங் கள் முழுவதும் பதற்றம் பரவி வருகிறது.

உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன் முறை சம்பவங்களில் 6 பேர் உயிரி ழந்தனர். 3,000 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 15 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோ, புலந்த்ஷெகர், கான்பூர், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப் பாட்டம், பேரணிகள் நடைபெற் றன. தலைநகர் லக்னோவில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. தடையை மீறி நூற்றுக்கணக் கானோர் நேற்று லக்னோவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீரட் நகரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் போலீஸாரை நோக்கி சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர். முஸாபர் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர் களை கலைத்தனர்.

கோரக்பூரில் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப் போது மாவட்ட எஸ்.பி.யின் கார் சேதப்படுத்தப்பட்டது. அங்கும் தடி யடி நடத்தப்பட்டது.

புலந்த்ஷெகர் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட் டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெரோஷாபாத்தில் புறக்காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. வாரணாசி, மதுரா, மொராதாபாத், பரேலி, மவு, ஆசம்கர், சுல்தான்பூர், ஆக்ரா, நொய்டா, அம்ரோஹா, ஹாபூர், கான்பூர், உன்னாவ், சம்பல் உட்பட உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். 15 மாவட்டங்களில் இணைய சேவை 45 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பதற்றமான நகரங்களில் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன் முறை சம்பவங்களில் 6 பேர் உயிரி ழந்தனர். இதுகுறித்து மாநில டிஜிபி ஓ.பி.சிங் கூறும்போது, "எந்த பகுதியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. போராட்டக் காரர்களின் வன்முறையில் அவர் கள் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் ஜும்மா மசூதி அருகில் பீம் சேனை தலைவர் சந்திர சேகர் ஆசாத் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அங்கிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ஆசாத்தை போலீஸார் கைது செய்தனர். அவரது ஆதர வாளர்கள் உதவியுடன் போலீஸ் பிடியில் இருந்து அவர் தப்பினார். தீவிர தேடுதலுக்குப் பிறகு போலீ ஸார் மீண்டும் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப் பட்டார்.

போலீஸ் தடியடி

பேரணியின்போது போலீஸ் தடுப்புகளை மீறி ஆர்ப்பாட்டக் காரர்கள் முன்னேறி செல்ல முயன் றனர். டெல்லி கேட் பகுதியில் அவர் களை போலீஸார் தடுத்து நிறுத் தினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். தண்ணீரை பீய்ச்சியடித் தனர். டெல்லி தார்யாகன்ஜ் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

வன்முறையைக் கட்டுப்படுத்த பழைய டெல்லி, நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல் செய்யப் பட்டுள்ளது. ஆளில்லா சிறிய விமா னங்கள் மூலம் டெல்லி நகரம் முழு வதும் கண்காணிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சவுரி பஜார், லால் குயிலா, ஜும்மா மசூதி, டெல்லி கேட், ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப் பட்டன.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன்பு காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி உட்பட பலர் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

மேற்குவங்கத்தில் பதற்றம்

மேற்குவங்கத்தில் மால்டா, முர்ஷிதாபாத், ஹவுரா, பராசத், வடக்கு தினாஜ்பூர், நாடியா உள் ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. அந்த பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச தலைநகர் போபால் உட்பட அந்த மாநிலத்தின் பல்வேறு நகரங் களில் நேற்று போராட்டங்கள் நடை பெற்றன. பிஹார் தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அசாம் மாநிலத்தில் உடனடி யாக இணைய சேவையை வழங்கு மாறு அந்த மாநில உயர் நீதிமன் றம் நேற்று முன்தினம் உத்தரவிட் டது. இதை ஏற்று 10 நாட்களுக்குப் பிறகு நேற்று இணைய சேவை வழங்கப்பட்டது.

யோசனைகளை தெரிவிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம். மக் களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. கடந்த 1987-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் பிறந்தோர் அல்லது அவர்களின் பெற்றோர் 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர் கள் என்றால் சட்டப்பூர்வமாக இந்திய குடிமகனாகி விடுவார்கள். எனவே குடியுரிமை திருத்த சட்டம் குறித்தோ, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தோ பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை.

குடியுரிமை தொடர்பான மனுக்களை இதுவரை ஆட்சியர்கள் பரிசீலித்து வந்தனர். புதிய சட்டத்தின் படி தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அந்த அதி காரிகளே, குடியுரிமை மனுக்களை பரிசீலனை செய் வார்கள். தகுந்த ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறும். அசாமை பொறுத்தவரை 1971-ம் ஆண்டுக்குப் பிறகு அசாமில் குடியேறியவர் கள் வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE