ஜார்க்கண்ட்டில் இன்று இறுதிகட்ட தேர்தல்: ஒவைஸி கட்சி போட்டியால் பாஜக பலனடைய வாய்ப்பு

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இறுதிகட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

ஆந்திராவை மையமாக வைத்து துவங்கிய முஸ்லிம் கட்சி யாகக் கருதப்படுவது ஏஐஎம்ஐஎம். இக்கட்சி ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது.

இதில், ஒவைசி கட்சியின் தனித்த போட்டி, பாஜகவுக்கு சாதகமாக முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே, ஒவைஸி கட்சியின் வேட்பாளர்கள் முஸ்லிம் வாக்குகளை பிரிப்பார்கள் என எதிர்க்கட்சிகள் அச்சமடைந் துள்ளன. இதனால், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமையும் வாய்ப் புகள் இருப்பதாகவும் கருதப்படு கிறது.

இந்நிலையில், தொடக்கத்தில் ஒவைஸி கட்சியை கண்டு கொள்ளாத எதிர்க்கட்சிகள், நான்கு கட்ட தேர்தலுக்கு பின்னர் அச்ச மடைந்துள்ளன. இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற வுள்ள நிலையில், ஒவைஸியை எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக விமர்சிக்கின்றன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வி பிரசாத் யாதவ் கூறும் போது, ‘பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் ஒவைஸி’ எனப் புகார் கூறினார். காங்கிரஸின் ஜார்க்கண்ட் மாநில தலைவரான ராஜேஷ் தாக்கூர், 'பாஜகவிற்கும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சிகளுக்கும் இடையே நடை பெறும் போட்டியில் வாக்குகளை பிரிக்க ஒவைஸி முயல்கிறார்' எனக் குற்றம்சாட்டினார்.

முதன்முறையாக ஆந்திரா விற்கு வெளியே 2014-ல் மகாராஷ் டிரா மாநில சட்டப்பேரவை தேர்த லில் ஒவைசி கட்சி 10 தொகுதி களில் போட்டியிட்டது. இதில் கிடைத்த இரு தொகுதிகளால் உற்சாகம் அடைந்த ஒவைஸி, மற்ற மாநிலங்களிலும் போட்டியிடத் தொடங்கினார்.

பிஹார் மற்றும் உத்தரபிரதேச சட்டப்பேரவைகளின் தேர்தலில் போட்டியிட்ட ஒவைசி கட்சி, பாஜக விற்கு சாதகமாக முஸ்லிம் வாக்கு களை பிரிப்பதாக கூறப்பட்டது.

பிஹாரில் சமீபத்தில் நடை பெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் ஒவைஸி கட்சி வெற்றி பெற்றது. பிறகு மகாராஷ்டிராவின் மக்களவை, சட்டப்பேரவை தேர்தலிலும் ஒவைஸி கட்சி போட்டியிட்டது. அதில், காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத் காங்கிரஸ் கூட்டணியின் முஸ்லிம் வாக்குகளை ஒவைஸி பிரித்ததால் சில தொகுதிகளில் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

இங்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது இரண்டு தொகுதியில் ஒன்றை மட்டும் ஒவைஸி தக்க வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE