வதோதரா: குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த மாணவர்கள் 5 பேர் கைது 

By பிடிஐ

குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் செய்த மாணவர்களில் ஒரு பிரிவினர் மோடியின் பெயரை இழுத்து களங்கம் விளைவித்ததாக மகாராஜ சாயாஜிராவ் பலகலைக் கழக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பிரிவு மாணவர்கள் சுவரோவியம் வரையும் போது மோடி என்ற பெயரில் உள்ள ‘ஓ’ என்ற அங்கில எழுத்திற்குப் பதிலாக ஸ்வஸ்திக் குறியீட்டை வரைந்து அதன் மீது கறுப்பு வண்ணத்தை அடித்திருந்தனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மாயமான இன்னும் 2 மாணவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்காக மாணவர்கள் 5 இடங்களைத் தேர்வு செய்திருந்தனர், இதில் போலீஸ் தலைமைச் செயலகம் இருக்கும் காலா கோடா சரகமும் ஒன்று. பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் உள்ள சுவர்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் கவனததை இதன் மீது திருப்பியுள்ளனர்.

“நோ சிஏபி மோடி என்று ஆங்கிலத்தில் எழுதி அதில் மோடி பெயரில் உள்ள ஆங்கில லிபி ‘ஓ’வுக்கு பதிலாக ஸ்வஸ்திக் குறியீட்டை வரைந்து அதன் மீது கறுப்பிட்டனர். இது ஒரு மதத்தினரை புண்படுத்தும் செயல். பொது அமைதிக்கு ஊறுவிளைவிப்பது. பொதுச்சொத்திற்கும் இந்த மாணவர்கள் சேதம் விளைவித்தனர்” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: புல்கிட் காந்தி (20), ரஜத் வியாஸ் (19), ருசிர் நாயர் (21), ஆர்யன் ஷர்மா (24), அயஜின் ஜான்சன் (23). மாயமான இருவரின் பெயர் ரிஷி நாயர் மற்றும் ரெனில் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்