குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
இதைக் கண்டித்து உ.பி.யில் உள்ள அலிகர் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மீது தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் சுமார் 30 மாணவர்களும் 17 போலீஸாரும் காயம் அடைந்து வளாகத்தில் உள்ளமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுகுறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்.நஜ்முல் இஸ்லாம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து 3 நாட்களாக மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். பேராசிரியர்கள் அசம்பாவிதம் நடைபெறாமல் பாதுகாத்து வந்தனர். எங்களுக்கே தெரியாமல் இரவு நேரத்தில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள சதி பற்றி விசாரிக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, அலிகர் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே இருந்த விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தி, வாகனங்கள் மற்றும் அறைகளுக்கு தீ வைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ஜனவரி 5-ம்தேதி வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீஸாரின் நடவடிக்கைகளை கண்டித்து பேராசிரியர்கள் நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். இதுபோல, மாணவர்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து அலிகர் நகரைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம் வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் தொடர்கிறது.
துணைவேந்தர் கோரிக்கை
இதுகுறித்து ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நஜ்மாஅக்தர் கூறும்போது, “எங்கள் மாணவர்களை களங்கப்படுத்த வேண்டாம். வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவோம். பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் அனுமதியின்றி நுழைந்தது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் புகார் செய்வோம். பொருட்சேதத்தை ஈடு செய்யலாம் ஆனால், வன்முறையால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடு செய்ய முடியாது. இதில் காயமடைந்த சுமார் 200 பேர்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் பலகலைக்கழக மாணவர்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago