குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று போராட் டங்கள் நடைபெற்றன. கொல்கத்தா வில் நடைபெற்ற கண்டனப் பேரணி யில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை மெஜாரிட்டி உறுப் பினர்கள் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு நிறை வேற்றியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து குடி யுரிமை திருத்தச் சட்டம் அம லுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களும் இந்தச் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்கள் இந்தச் சட் டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே நேற்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அமைச்சர்கள், காங் கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் இருகட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண் டனர். ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக் கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை யில் நேற்று பிரமாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பல்லாயிரக் கணக்கான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய அரசு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோ ருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு கொல்கத்தா நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றனர்.
பின்னர் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “நாட்டு மக்களுக்கு எதிரான செயலில் பாஜக தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இப்படியே விட்டால் இந்த நாட்டில் பாஜக மட் டுமே இருக்கும். மற்ற அனைவரை யும் அவர்கள் வெளியேறச் செய் வார்கள். அதை ஒருபோதும் நடக்க விடக்கூடாது. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை யும் தேசிய குடிமக்கள் பதிவேட் டையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
போராட்டத்தின்போது சில ரயில் களுக்கு தீ வைக்கப்பட்டதால், மத்திய அரசு மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவையை நிறுத்தி விட்டது.
சட்டம் ஒழுங்கு குறித்து மற்றவர் களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தான் ஆட்சி செய்யும் வட கிழக்கு மாநிலங்களை பாஜக கவனிக்க வேண்டும். மேற்கு வங்கத்துக்கு வெளியில் இருந்து வந்த சில சக்திகள், முஸ்லிம் சமுதாய நண்பர்கள் என்ற பெயரில் தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். மக்கள் இதை உணரவேண்டும்” என்றார்.
இந்நிலையில், வரும் 19-ம் தேதி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டத்தில் மதச்சார் பற்ற, ஜனநாயக ரீதியிலான அனைத்து சக்திகளும் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் டி.ராஜா நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் உத்தரவு
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெறும் போராடத் தின்போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக போலியான செய்திகள், வதந்திகளை பரவவிடாமல் தடுக்க வேண்டும். இதற்காக சமூக வலைத் தளங்களை அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வன்முறை, கல வரம், போராட்டம் நடைபெறுவ தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளை விப்பதைத் தடுக்கவும், உயிர்ச் சேதத்தைத் தடுக்கவும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago