நிர்பயா நிதியை பயன்படுத்தாத மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்கள்

By செய்திப்பிரிவு

நிர்பயா நிதியில் இருந்து மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 2012-ம் ஆண்டுமாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவுகளுக்காக ‘நிர்பயா நிதி’ யை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஏற்படுத்தியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,649 கோடியில் ரூ.147 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் கர்நாடகா 7 சதவீதம், தமிழ்நாடு 3 சதவீதம், டெல்லி 5 சதவீதம் பயன்படுத்தி உள்ளதாகவும் மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் டியூ ஆகியவை நிர்பயா நிதியில் இருந்து ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்தவில்லை என்றும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இதனிடையே, மத்திய அரசு ஒதுக்கியதாகக் கூறும் ரூ.390 கோடி ரூபாய் நிர்பயா நிதியை டெல்லி அரசு பெறவில்லை என்றும் நிர்பயா நிதியைக் கொண்டு டெல்லி பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் அவசர உதவி பட்டன்கள் அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்