தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாத காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வலியறுத்தியுள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி மேக் இன் இந்தியா, ரேப் இன் இந்தியா மாறியுள்ளது என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரி பாஜக பெண் எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஆனால், ராகுல் காந்தி மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்தார்
டெல்லியில் தேசத்தைக் காப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய ராகுல் காந்தி, " என்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி" என்று பேசி இருந்தார்
இதற்குப் பதிலடி கொடுத்த பாஜக, "முஸ்லிம்கள் ஆதரவைப் பெறுவதற்காகப் பேசிவரும் ராகுல் காந்திக்கு ராகுல் ஜின்னா என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்" என்று தெரிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நாக்பூர் நகரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். சுதந்திரப் போராட்டம் குறித்த எந்த வரலாறும் தெரியாமல் ராகுல் காந்தி இதுபோன்ற கருத்துக்களைப் பேசுகிறார்.
மகாரஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அனைத்து கட்சி எம்எல்ஏக்களுக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்தில் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அதைப் புறக்கணித்துவிட்டோம்.
சாவர்கர் குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிப்பு போல் சஞ்சய் ராவத் பேசிவிட்டு, நேரு, மகாத்மா காந்தி குறித்தும் பேசி காங்கிரஸ் கட்சியை சமாதானாம் செய்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியி்ல் அமர்ந்தும் யாருக்கும் பயனில்லை
வீர சாவர்க்கரை மரியாதைக் குறைவாகப் பேசிய கட்சியினருடன் அமர்ந்து நாங்கள் தேநீர் அருந்துவதை விரும்பவில்லை. சிவசேனா அரசில் இதுவரை எத்தனை அமைச்சர்கள், யாருக்கெல்லாம் அமைச்சர் பொறுப்பு என்ற தெளிவில்லாமல் இருக்கிறது. சாவர்க்கரை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குறித்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எழுப்புவோம்
இவ்வாறு பட்னவிஸ் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago